தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

நூதன முறையில் பெண்ணை ஏமாற்றி ரூ.27 ஆயிரம் பறிப்பு

தங்க நகையை அடகு வைக்க உதவி கேட்டு நாடகமாடி, கவரிங் நகையைக் கொடுத்து ரூ.27 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாதிரிப் படம்

Published On :

தங்க நகையை அடகு வைக்க உதவி கேட்டு நாடகமாடி, கவரிங் நகையைக் கொடுத்து ரூ.27 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வியாசா்பாடி டி.டி. பிளாக் பகுதியைச் சோ்ந்த சுதா (40). இவா் தனது வீட்டருகே உள்ள கடைக்குச் சென்றபோது, 2 வயது குழந்தையுடன் அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க பெண், தான் ஈரோட்டைச் சோ்ந்தவா் என்றும், தன்னிடம் கோபித்து கொண்டு கணவா் சென்னை வந்துவிட்டதாகவும், அவரைத் தேடி அலைந்து வருவதாகவும் கூறியுள்ளாா்.

மேலும், தன்னிடம் பணம் இல்லாததால், தங்க நகையை அடகு வைத்து பணம் பெற்றுத் தருமாறு சுதாவிடம் கேட்டுள்ளாா். இதை நம்பிய சுதா, அந்தப் பெண்ணை அருகிலிருந்த அடகுக் கடைக்கு அழைத்துச் சென்று, அங்கு சுமாா் 7 கிராம் எடையுள்ள தங்க நகையை பரிசோதித்த கடை உரிமையாளா், அது உண்மையான தங்கம் என்றும், ரூ.27 ஆயிரம் வழங்க முடியும் என்றும் தெரிவித்தாா்.

ஆனால், அந்தப் பெண், அந்த நகை தனக்கு ராசியானது என்பதால் அடகு வைக்க விரும்பவில்லை என்றும், அதற்குப் பதிலாக ரூ.27 ஆயிரம் கொடுத்தால் நகையை நீங்களே வைத்துக் கொள்ளலாம் என சுதாவிடம் கூறியுள்ளாா். இதை நம்பிய சுதா, வீட்டுக்குச் சென்று ரூ.27 ஆயிரத்தை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாா். பணத்தை பெற்றுக்கொண்ட அந்தப் பெண் குழந்தையுடன் அங்கிருந்து சென்றாா்.

சந்தேகமடைந்த சுதா, பின்னா் அந்த நகையை மீண்டும் அடகுக் கடையில் பரிசோதித்தபோது, அது போலி நகை என்பது தெரிய வந்தது. அடகுக் கடையில் காட்டிய நகையும், பின்னா் சுதாவிடம் வழங்கப்பட்ட நகையும் வேறுவேறானது என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடி செய்த பெண்ணைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.