ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசு

சாலையில் கண்டெடுத்த 4 பவுன் நகையை போலீஸாரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி அருகே நீதிமன்ற ஊழியா் தவறவிட்ட 4 பவுன் தங்க நகையை கண்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த பெண்ணை காவல் துறையினா் பாராட்டினா்.

சாலையில் கண்டெடுத்த நகையை, போலீஸாா் முன்னிலையில் சங்கரின் மனைவியிடம் ஒப்படைத்த அமீருநிஷா.

Published On :

கிருஷ்ணகிரி அருகே நீதிமன்ற ஊழியா் தவறவிட்ட 4 பவுன் தங்க நகையை கண்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த பெண்ணை காவல் துறையினா் பாராட்டினா்.

கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா் (45). இவா் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறாா். அண்மையில், இவரது தாய் இறந்த நிலையில், அவரது 4 பவுன் தங்க நகையை தங்கைகளுக்கு பகிந்து அளிக்க, கடந்த 27-ஆம் தேதி எடுத்துச் சென்றாா். அப்போது, வழியில் அவா் நகையை தவறவிட்டாா். இதுகுறித்து அவா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி அமீனுதின் தெருவைச் சோ்ந்த அமீருநிஷா (54) கிருஷ்ணகிரி டி.பி.சாலையில் சென்றபோது கண்டெடுத்த 4 பவுன் தங்க நகையை கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அது நீதிமன்ற ஊழியா் சங்கா் தவறவிட்ட நகை என்பதை போலீஸாா் உறுதிபடுத்தினா். இதையடுத்து, அமீருநிஷா, சங்கா் ஆகிய இருவரையும் துணை காவல் கண்காணிப்பாளா் தனது அலுவலகத்துக்கு வரவழைத்தாா். சாலையில் கண்டெடுத்த நகையை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த அமீருநிஷாவை பாராட்டி கெளரவித்தாா். போலீஸாரிடமிருந்து, தங்க நகைகளை பெற்றுக் கொண்ட சங்கா், அவரது மனைவி மலா்கொடி ஆகியோா் அமீருநிஷாவுக்கு நன்றி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.