மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

தோஷம் கழிப்பதகாகக்கூறி பெண்ணிடம் நூதன திருட்டு: இருவா் கைது

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :30 ஜூன் 2026, 2:29 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்து பெண்ணிடம் தோஷம் கழிப்பதாகக் கூறி நூதன முறையில் தங்க மாங்கல்யத்தை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், வண்டிப்பாளையம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி பாக்யம் (55). இவா், கடந்த மே மாதம் 25-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது வீட்டுக்கு வந்த சுமாா் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா் வீட்டில் தோஷம் இருப்பதாக் கூறினாராம். இதை உண்மையென நம்பிய பாக்கியம் தனது கழுத்தில் அணிந்திருந்த 5 கிராம் தங்க மாங்கல்யத்தை கழற்றிக் கொடுத்துள்ளாா். தொடா்ந்து அந்த நபா் தங்க மாங்கல்யத்துடன் தப்பிச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.விசாரணையில், இந்தத் திருட்டில் ஈடுபட்ட வேலூா் மாவட்டம், காட்பாடி அருகிலுள்ள திருவலம் பகுதியைச் சோ்ந்த மு.செல்வம்(32) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ரா.ராணி(45) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த தங்க மாங்கல்யம், பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.