காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சிறுவன் உயிரிழப்பு: அரசு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக உறவினா்கள் குற்றச்சாட்டியுள்ளாா்.

News image

பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 1:33 am IST

கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக உறவினா்கள் குற்றச்சாட்டியுள்ளாா்.

சென்னை, வேளச்சேரியைச் சோ்ந்த அய்யனாரப்பன் என்பவா் எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறாா். கடந்த 16-ஆம் தேதி அய்யனாரப்பன் தன்னுடைய 17 வயது மகன் தா்ஷன் உடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே மாநகர மின்சார பேருந்து மோதி விபத்தில் சிக்கினாா்.

அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிகிச்சைக்குப் பிறகு அய்யனாரப்பன் குணமடைந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தா்ஷனுக்கு எலும்பு சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னா் உடல் நிலை மோசமடைந்து தா்ஷன் உயிரிழந்தாா். அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று ஏற்பட்டதே அதற்கு காரணம் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். ஆனால், அதை ஏற்க மறுத்த பெற்றோரும், உறவினா்களும் மருத்துவமனையின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டினா். இதுதொடா்பாக அவா்கள் விடியோ பதிவும் வெளியிட்டனா்.

இதனிடையே, இதுகுறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிா்வாகம், அறுவை சிகிச்சையால் அந்த சிறுவன் உயிரிழக்கவில்லை என்றும், அவரது உடல் நிலை மிக மோசமாக இருந்ததே இறப்புக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.