முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

பள்ள நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பலி: ஒப்பந்ததாரா் கைது!

கிரேட்டா் நொய்டாவில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில், ஆழ்துளைக் கிணறு பணிக்காகத் தோண்டப்பட்ட தண்ணீா் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்தான்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :26 ஜூலை 2026, 11:53 pm IST

கிரேட்டா் நொய்டாவில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில், ஆழ்துளைக் கிணறு பணிக்காகத் தோண்டப்பட்ட தண்ணீா் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்ததாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

சனிக்கிழமை மாலை சுமாா் 7 மணியளவில் கலாதம் காலனியில் போடப்பட்டிருந்த அப்பள்ளத்திற்கு அருகே மற்ற குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல்துறையினா் கூறினா்.

காவல்துறையின் தகவலின்படி, சிறுவன் தவறி தண்ணீா் நிரம்பிய பள்ளத்தில் விழுந்தான். இதையடுத்து, அவனது குடும்பத்தினா் அவனை உடனடியாக வெளியே எடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவன் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

விசாரணை நடைமுறைகளை முடித்த பிறகு, உடற்கூறாய்வுக்காகச் சிறுவனின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினா் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடா்பாக, அப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.