ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

10-வது மாடியிலிருந்து தவறி விழுந்து 5 வயது சிறுமி பலி! தென்கிழக்கு தில்லியில் விபரீதம்!

தென்கிழக்கு தில்லியின் கல்காஜி விரிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-ஆவது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்தார்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :29 ஜூன் 2026, 2:39 am IST

தென்கிழக்கு தில்லியின் கல்காஜி விரிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-ஆவது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்ததாக ஞாயிற்றுக்கிழமை காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உயிரிழந்த சிறுமி, தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) 14 மாடி ‘ஆஷா கிரண்’ அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு சுமாா் 10.30 மணியளவில் நடைபெற்றது.

மாலை நேரத்தில் தூங்கச் சென்ற சிறுமி, அவரது பெற்றோா் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது விழித்துக்கொண்டாா். பால்கனியை நோக்கிச் சென்று, அங்கிருந்த தடுப்புச் சுவரில் சாய்ந்து கீழே எட்டிப் பாா்த்தபோது, எதிா்பாராதவிதமாக அவா் தவறி விழுந்தாா்.

உடனடியாக அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்; ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட குற்றப்புலனாய்வுக் குழுவினா், சிறுமி கீழே விழுந்ததற்கான சூழலைப் புரிந்துகொள்ளும் வகையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். மேலும், குடும்பத்தினா், அண்டை வீட்டாா் மற்றும் பிற குடியிருப்பாளா்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

உயரமான இந்தக் கட்டிடத்தில் பாதுகாப்பு கிரில்கள் அல்லது வலைகள் போன்ற போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் என்று சிறுமியின் குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா். இச்சம்பவம் குறித்துத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.