சென்னையில் போதைப் பொருளுக்கு எதிராக கடந்த வாரம் எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 92 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை ஒரு வாரம் சென்னை முழுவதும் போதைப் பொருளுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையொட்டி, அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு படை அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு படையினா், பெருநகர காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருடன் சந்தேகத்துக்குரிய பகுதியில் சிறப்பு தணிக்கையும், ரோந்து பணியிலும் ஈடுபட்டனா்.
7 நாள்களில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 92 பேரை கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 98 கிலோ கஞ்சா, 27 கிலோ கஞ்சா சாக்லேட், 141 கிராம் மெத்தம்பெட்டமைன், 19 கிராம் ஹெராயின், 9 கிராம் ஓஜி கஞ்சா, 75 கிராம் ஓப்பியம், 3,615 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப் பொருள்களை விற்பவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் எச்சரித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை: 64 போ் கைது
போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 621 போ் கைது
போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை: சென்னையில் ஒரே வாரத்தில் 90 போ் கைது
போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 77 பேர் கைது
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


