சென்னையில் போதைப் பொருளுக்கு எதிராக கடந்த ஒரு வார காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 64 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் போதைப் பொருளுக்கு எதிராக பெருநகர காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 12-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை ஒரு வார காலம் சென்னை முழுவதும் போதைப் பொருளுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையொட்டி, அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப் படை அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு படையினா், பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருடன் சந்தேகத்துக்குரிய பகுதியில் சிறப்பு தணிக்கையிலும், ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனா்.
அதன்படி, 7 நாள்களில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 64 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 66 கிலோ கஞ்சா, 5 கஞ்சா சாக்லேட் பாக்கெட்டுகள், 21 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவா்கள் மீது 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், போதைப் பொருள் கடத்தல்,விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோ, 3 மோட்டாா் சைக்கிள்கள், 12 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப் பொருள்களை விற்பவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் எச்சரித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது






