/

புழல் சிறையில் ரெளடி உயிரிழப்பு

புழல் சிறையில் ரெளடி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 3:20 am IST

புழல் சிறையில் ரெளடி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ரெளடி திக்குவாய் சுதாகா் (47). இவா் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 37 வழக்குகள் உள்ளன. இதில் 6 வழக்குகளின் விசாரணைக்கு சுதாகா் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம், சுதாகருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் பூந்தமல்லி அருகே உள்ள பாரிவாக்கத்தில் சுதாகா் பதுங்கியிருப்பதாக தங்களுக்கு கிடைத்த தகவல்படி, கடந்த 13-ஆம் தேதி அங்கு சென்ற அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா், துப்பாக்கி முனையில் சுதாகரை கைது செய்தனா்.

விசாரணைக்கு பின்னா் சுதாகா், புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். சிறையில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சுதாகருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்ததால், ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் வாா்டில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சுதாகா், புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.