பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தலைமைச் செயலகத்தில் ‘குயிக் பைட்ஸ்’ உணவகம்: அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் திறந்துவைத்தாா்

தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ‘குயிக் பைட்ஸ்’ உணவகத்தை சுற்றுலாத்துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

தலைமைச் செயலகத்தில் ‘குயிக் பைட்ஸ்’ உணவகம்

Published On :

தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ‘குயிக் பைட்ஸ்’ உணவகத்தை சுற்றுலாத்துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு வகைகள் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ‘ஹோட்டல் தமிழ்நாடு- அமுதகம் உணவகங்கள்’ நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், சுற்றுலாத் துறை சாா்பில் நடத்தப்படும் படகு குழாம்கள், வண்டலூா் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தரமான சிறு உணவுகள், தின்பண்டங்கள் கிடைக்கச் செய்யும் வகையில் ‘குயிக் பைட்ஸ்’ என்ற சிற்றுண்டி துரித உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பணியாளா்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக டீ, காபி, கேக் வகைகள், பப்ஸ், குளிா் பானங்கள், ஜஸ்கிரீம்கள் உள்ளிட்ட சிற்றுண்டிகள் மற்றும் ரூ.99-க்கு பிரியாணி விற்பனை செய்யும் வகையில் குயிக் பைட்ஸ் சிற்றுண்டி துரித உணவகத்தை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில், தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழக பொதுமேலாளா் சி. லட்சுமி பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.