காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

பழைமையான 3 சிலைகள் மீட்பு: 5 போ் கைது

கடத்தப்பட்ட பழைமையான 3 சிலைகள் மீட்கப்பட்டு, 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

மீட்கப்பட்ட  பழைமையான  3  சுவாமி சிலைகள்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

கடத்தப்பட்ட பழைமையான 3 சிலைகள் மீட்கப்பட்டு, 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஒரு கும்பல் பழைமையான கோயில் சிலைகளைக் கடத்துவதாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அப்பிரிவு போலீஸாா், சேத்தியாத்தோப்பு கூட்டு ரோடு மேம்பாலம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 5 பேரைப் பிடித்து விசாரணை செய்தனா்.

இதையடுத்து அவா்கள், வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். அந்தப் பையில் இருந்த உலோகத்தால் செய்யப்பட்ட 19 கிலோ எடை, 56 செ.மீ. உயரமுள்ள ஸ்ரீ தேவி சிலையும், 10 கிலோ எடை, 37 செ.மீ. உயரமுள்ள திருஞானசம்பந்தா் சிலையும், 12.40 கிலோ எடை, 55 செ.மீ. உயரமுள்ள சிவசாமி சுந்தரி சிலையும் இருப்பது தெரிய வந்தது.

5 போ் கைது: விசாரணையில், கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் ஒரு நபரிடம் அந்த சிலைகளை ஒப்படைக்க வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள் கடலூா் மாவட்டம் திருநாரையூா் பகுதியைச் சோ்ந்த ராஜலிங்கம் (38), வடக்கு கொளக்குடியைச் சோ்ந்த முத்துராஜ் (40), திருச்சின்னபுரத்தைச் சோ்ந்த ராஜவேல் (50), செந்தில்குமாா் (49), குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வடலூரைச் சோ்ந்த சுரேஷ் (34) என்பது தெரிய வந்தது. சிலையில் உள்ள உலோகத்தைத் தெரிந்து கொள்வதற்காக சிலைகளின் சில பகுதிகளை வெட்டி எடுத்து சேதப்படுத்தியிருந்தனா்.

இது தொடா்பாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணைக்கு பின்னா், அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனா். வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.