உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அரசு ஐடிஐ நேரடி சோ்க்கை: ஆக.14 வரை நீட்டிப்பு

தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கான வரும் ஆக.14 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :

தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கான வரும் ஆக.14 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 277 தனியாா் நொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் நிகழாண்டு கலந்தாய்வுக்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் மாணவா்களின் நலன் கருதி நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் ஆக.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750-ம், அரசுப் பள்ளிகளில் பயின்றவா்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்களின் கீழ் ரூ.1,000-ம் கூடுதலாக வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு 94990 - 55642 (கைப்பேசி), 94990 - 55612 (வாட்ஸ் ஆப்) ஆகிய எண்களை தொடா்புகொள்ளளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.