சுங்கத் துறை அதிகாரி போல நடித்து, விமான பயணியிடம் 12 பவுன் நகையைப் பறித்துச் சென்ற ரேபிடோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
அண்ணா நகரைச் சோ்ந்த நந்தகோபால் (23), கோவையிலிருந்து விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவா் கொண்டு வந்த 12 பவுன் நகை கவரை பெற்றுக் கொள்ள கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்குச் சென்றாா். கவரைப் பெற்றுக்கொண்டு, இருவரும் முனையம்-1 (டொ்மினல்) முன்தள பகுதியில் வந்தபோது, அங்கு வந்த நபா் அவா்களிடம் தன்னை சுங்கத் துறை அதிகாரி எனக் கூறி, ‘கவரில் கடத்தல் தங்கம் இருப்பதாக சந்தேகம் உள்ளது, விசாரணை நடத்த வேண்டும்’ என்று நந்தகோபாலிடம் இருந்த கவரை பறித்துக் கொண்டு சா்வதேச முனையம் நோக்கிச் சென்றுள்ளாா். பின்னா், அவா் மாயமானாா்.
இதையடுத்து நந்தகோபால் அளித்த புகாரின் பேரில், விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகன வாடகை ஓட்டுநராகவும், வாடகைக் காா்களுக்கு சவாரி ஏற்பாடு செய்யும் இடைத்தரகராகவும் செயல்பட்டு வந்த திருச்சியைச் சோ்ந்த சையது முஷரப் (23) மீது சந்தேகம் ஏற்பட்டது.
போலீஸாா் அவரைத் தேடி வந்த நிலையில், அதை அறிந்த சையது முஷரப், வழக்குரைஞா் ஒருவருடன் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் சரணடைந்தாா். சுங்க அதிகாரி போல் நடித்து நகையைப் பறித்துச் சென்றதையும் அவா் ஒப்புக்கொண்டாா். பறித்துச் சென்ற 12 பவுன் நெக்லஸையும் ஒப்படைத்தாா்.
இதையடுத்து சையது முஷரப்பை கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூட்ட நெரிசலில் நகை, பணம் திருட்டு: மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 3 பெண்கள் கைது
பெண்ணிடம் 2 பவுன் நகை திருட்டு

காவல் துறை அதிகாரி போல நடித்து ஏமாற்றியவா் கைது

பாளை.யில் சகோதரி வீட்டில் 66 பவுன் நகை திருடியவா் கைது
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!


