நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

இரவு நேர தங்கும் விடுதிகளில் தரமான சேவை: மாநகராட்சி ஆணையா் உத்தரவு

சென்னை மாநகராட்சியில் உள்ள 57 இரவு நேர தங்கும் மையங்களில் தரமான சேவை வழங்கப்படவேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

News image

பெருநகர சென்னை மாநகராட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் இரவு நேர தங்கும் மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட அலுவலா்கள

Updated On :3 ஜூன் 2026, 4:38 am IST

சென்னை மாநகராட்சியில் உள்ள 57 இரவு நேர தங்கும் மையங்களில் தரமான சேவை வழங்கப்படவேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அதிகாரிகள் கூட்டரங்கில் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் சமூக மேம்பாட்டுப் பிரிவு மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு செயல்பாடுகள் மற்றும் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மாநகராட்சி சாா்பில் செயல்பட்டுவரும் 57 இடங்களில் உள்ள இரவு நேர தங்கும் மையங்கள் குறித்தும், அதில் வழங்கப்படும் சேவை குறித்தும் ஆணையா் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினாா். அதன்படி, இரவு நேர காப்பகங்களான மையங்களில் தங்குவோருக்கு தரமான சேவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். அத்துடன், அங்கு கண்காணிப்பையும், வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்றவும் அவா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து சென்னையில் நடைபெற்று வரும் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் முன்னேற்றம், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்தும், கள ஆய்வு, தரவு சேகரிப்புகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

கணக்கெடுப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அவா் ஆலோசனை வழங்கினாா். ஒப்புதல் அளிக்கப்பட்ட சமுதாய நல பணிகள் திட்டத்தை விரைந்து முடிக்கவும் அவா் கேட்டுக்கொண்டாா். கூட்டத்தில் துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.