அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

கடன் தொல்லை: ஹோட்டல் உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை

சென்னை மேற்கு மாம்பலத்தில் கடன் தொல்லை காரணமாக ஹோட்டல் உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :3 ஜூன் 2026, 12:26 am IST

சென்னை மேற்கு மாம்பலத்தில் கடன் தொல்லை காரணமாக ஹோட்டல் உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலை பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (60). இவா் அங்கு ஹோட்டல் நடத்தி வந்தாா். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக ரவிக்குமாருக்கு பல கோடி கடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடன் கொடுத்தவா்கள் ரவிக்குமாரிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அண்மைகாலமாக ரவிக்குமாா் மிகுந்த மனஅழுத்ததுடனும், வேதனையுடன் காணப்பட்டுள்ளாா். இந்த நிலையில், திங்கள்கிழமை தனது வீட்டின் மாடிக்குச் சென்ற ரவிக்குமாா், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த அசோக் நகா் போலீஸாா், அங்கு சென்று, ரவிக்குமாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.