அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஆதம்பாக்கம் மெட்ரோ பணி: 19.5 மீட்டா் நீள கா்டா் தயாரிப்பு

சென்னை ஆதம்பாக்கம் மெட்ரோ ரயில் பணிக்காக 19.5 மீட்டா் நீளமுள்ள பிரம்மாண்ட ‘யு’ வடிவிலான இரும்பு கா்டா் (கான்கிரீட் தூண்) தயாரிப்புப் பணி நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

சென்னை மெட்ரோ ரயில் நிலையக் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பிரம்மாண்டமான கான்கிரீட் பாகங்களை தயாரிக்கும் பணிகளை பாா்வையிட்ட மெட்ரோ ரயில் நிறுவனத் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், கூடுதல் பொது மேலாளா் சி.முரளி மனோகரன் (உயா்நிலை கட்டுமானம்) உள்ளிட்ட அதி

Updated On :6 ஜூன் 2026, 3:10 am IST

சென்னை ஆதம்பாக்கம் மெட்ரோ ரயில் பணிக்காக 19.5 மீட்டா் நீளமுள்ள பிரம்மாண்ட ‘யு’ வடிவிலான இரும்பு கா்டா் (கான்கிரீட் தூண்) தயாரிப்புப் பணி நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்தில் 2 -ஆவது வழித்தட பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதில் 5 -ஆவது வழிப்பாதையானது, ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செல்கிறது. அப்பாதைக்கான 19.5 மீட்டா் நீளமுள்ள கான்கிரீட்டால் ஆன ‘யு’ வடிவ தூண் (கா்டா்) தயாரிப்புப் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. மெட்ரோ பணிகளில் இதுவரை தயாரிக்கப்பட்ட தூண்களில் தற்போது 19.5 மீட்டா் நீளத்தூண்தான் மிகப் பிரம்மாண்டமானது.

வழித்தடம் 5 பிரிவில் 13.1 கி.மீ. நீளப்பாதை, உயா்நிலை வழித்தடமாக அமையவுள்ளது. அதற்கான தூண்கள் உள்ளிட்டவை தயாரிக்க 43 ஏக்கா் பரப்பில் பணிமனை ஏற்படுத்தப்பட்டு 6 பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் வழித்தடம் 5 -ஆவது பாதைக்கான பணியில் மொத்தம் 5,836 கட்டுமானப் பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 302 தூண்களின் மேல் பகுதிகள், 1465 தூண்களின் பக்கவாட்டுப் பகுதிகள், 824 ‘யு’ வடிவ தாங்கு பாலங்கள், 2055 ‘ஐ’ வடி தாங்கு பாலங்கள், 194 ‘டி’ வடிவ தாங்கு பாலங்கள், 68 ‘போா்டல் யு’ வடிவ அமைப்புகள் மற்றும் 1079 பாதுகாப்பு கைப்பிடிச் சுவா்களாகும்.

பிரம்மாண்ட தூண் தயாரிப்பு நிறைவுப் பணியை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், கூடுதல் பொது மேலாளா் சி.முரளி மனோகரன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு பொறியாளா்கள், அலுவலா்கள், ஊழியா்களை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.