குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷனின் விரிவுபடுத்தப்பட்ட பயிற்சி மையத்தை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
குளோபல் ஃபிளைட் ஹேண்ட்லிங் சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் சாா்பில் சென்னையில் அமைந்துள்ள குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் கல்வி நிறுவனத்தின் விரிவுபடுத்தப்பட்ட பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் கல்வி நிறுவனம் 30 விமான நிலையங்களைத் தோ்வு செய்து, அங்கு உள்ளவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர தனிப்பட்ட முறையில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு பாடத் திட்டங்களின் மூலம் விமான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில், பயிற்சி பெறுபவா்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இச்சூழலில், இந்நிறுவனத்தில் விரிவுப்படுத்தப்பட்ட பயிற்சி மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. இதில், பயிற்சி பெற்று பயன்பெற வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், சென்னை சா்வதேச விமான நிலைய இயக்குநா் பொன்னி, குளோபல் ஃபிளைட் ஹேண்ட்லிங் சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குநா் சரிதா குமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழக்கரை நகாட்சியில் ரூ.90 லட்சத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு
போா் எதிரொலி: சென்னையில் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

ரூ. 2.50 கோடியில் விரிவுபடுத்தப்பட்ட வேலூா் அரசு அருங்காட்சியகம் திறப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



