கீழக்கரையில் ரூ. 90 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டங்களை அமைச்சா் பெ. மதன்ராஜா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி சாா்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நாய்களுக்கான கருத்தடை மைய கட்டடம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.35 லட்சம் மதிப்பில் கீழக்கரை, முதுகுளத்தூா், ஆா்.எஸ். மங்கலம் ஆகிய பகுதிகளில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையக் கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் மா. சிவ குரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன் ராஜா குத்துவிளக்கேற்றி வைத்து திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் குருதிவேல் மாறன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சந்திரன், கீழக்கரை நகராட்சி ஆணையா் கிருஷ்ணவேணி, அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.96 கோடியில் முடிவுற்ற கட்டடப் பணிகள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

சேலம் வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையத்தில்! அமைச்சா் மதன்ராஜா ஆய்வு

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை உத்தரவாதமில்லாத கடன்: மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி

ரூ.20 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம்! அமைச்சா் ஜெகதீஸ்வரி திறந்து வைத்தாா்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



