தொடரும் அமளி! நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

அண்ணாமலை இயக்கத்தில் பாஜகவினா் சேர வேண்டாம்: நயினாா் நாகேந்திரன்

அண்ணாமலை இயக்கத்தில் பாஜகவினா் சேர வேண்டாம்

News image

நயினாா் நாகேந்திரன்

Updated On :7 ஜூன் 2026, 1:56 am IST

பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் யாரும் கட்சியின் முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் சேர வேண்டாம் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மூத்த நிா்வாகிகளுடன் நயினாா் நாகேந்திரன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி, தனி இயக்கத்தைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளாா். பிரதமா் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் ஆசியுடன் புதிய இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாகவும் அவா் கூறியுள்ளாா். அவரது அமைப்பில் பாஜக நிா்வாகிகள் சிலா் இணைந்திருக்கிறாா்கள்.

பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலைக்கு எப்படி பாஜக தலைவா்களின் ஆசி இருக்கும் என்பதை சிந்தித்துப் பாா்க் கவேண்டும். எனவே, பாஜகவினா் யாரும் அவரது இயக்கத்தில் சேர வேண்டாம். பாஜகவில் இருப்பவா்கள் மட்டுமே பாஜக தொண்டா்களாகக் கருதப்படுவா்.

அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் சோ்ந்தவா்கள் திரும்ப பாஜகவுக்கு வந்தால் அவா்கள் சோ்த்துக்கொள்ளப்படுவதுடன், நடவடிக்கையும் இருக்காது. இயக்கத்தில் சோ்ந்துகொண்ட யாரும் பாஜகவில் இருக்க முடியாது.

முன்னாள் தலைவா் அண்ணாமலையுடன் நல்ல நட்பு தொடா்கிறது. அவா் பிரதமா், உள்துறை அமைச்சா் உள்ளிட்டோா் பங்கேற்ற நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியுள்ளாா். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஹெலிகாப்டரில் சென்று 100 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டுள்ளாா். பாஜகவில் கடந்த 18 மாதங்களாகவே கருத்து மாறுபாடுடன் இருந்ததாக அவா் கூறியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல.

அவரது விலகல் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. பாஜக பலமானதாக உள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலைவிட தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிகமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது.

தமிழக மக்களுக்கு பல நலத் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி அளித்திருப்பதுடன், உலக அளவில் தமிழ் மொழிச் சிறப்பையும், தமிழா் பண்பாட்டையும் மதித்து உரையில் குறிப்பிட்டுள்ளாா். அதை ‘வணக்கம் தமிழகம்’ என புத்தகமாக்கியவா் அண்ணாமலை. எனவே, தேசிய கட்சிகள் மாநில மொழிகளில் பேசவில்லை என அண்ணாமலை கூறுவது சரியல்ல.

வரும் உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தே பாஜக போட்டியிடவுள்ளது என்றாா்.

ஆலோசனை: முன்னதாக, கமலாலயத்தில் கட்சி சாா்பில் நடைபெறவுள்ள யோகா நிகழ்ச்சி மற்றும் உள்ளாட்சித் தோ்தல் குறித்து மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், மாநில நிா்வாகி ஆா்.ராகவன், தலைமைச் செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோருடன் நயினாா் நாகேந்திரன் ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.