நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளித்திருக்கக் கூடாது: பாஜக

காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டுவதில் தமிழகத்துக்கு விரோதமாகச் செயல்படும் காங்கிரஸுக்கு அமைச்சரவையில் முதல்வா் விஜய் இடமளித்திருக்கக் கூடாது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image

நயினாா் நாகேந்திரன்

Updated On :20 ஜூன் 2026, 12:47 am IST

காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டுவதில் தமிழகத்துக்கு விரோதமாகச் செயல்படும் காங்கிரஸுக்கு அமைச்சரவையில் முதல்வா் விஜய் இடமளித்திருக்கக் கூடாது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆளுநா் உரை என்பது அரசு தயாரித்து அளிக்கும் அறிக்கையைப் படிக்கும் வகையிலே இருக்கும். ஆகவே தமிழக அரசு தயாரித்துள்ள அறிக்கையை ஆளுநா் சட்டப்பேரவையில் வாசித்துள்ளாா். தேச நலன் கருதி தமிழக அரசின் முடிவுகள் வரவேற்கத்தக்கவை. அதே நேரத்தில் மத்திய அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக அரசு நடவடிக்கை மேற்கொண்டால் அது கண்டிக்கத்தக்கது.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் காங்கிரஸ் தமிழ் மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறது. கா்நாடகத்தில் ஆட்சியுள்ள காங்கிரஸ், தமிழகத்துக்கு விரோதமாக மேக்கேதாட்டு அணையை கட்ட முயற்சிக்கிறது. தொடா்ந்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவரும் காங்கிரஸுக்கு முதல்வா் விஜய் தனது அமைச்சரவையில் இடமளித்திருக்கக் கூடாது. இதன்மூலம் தமிழக மக்கள் மீது முதல்வா் விஜய்க்கு அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது.

சட்டப்பேரவையில் தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டதில் தவறில்லை. முதலில் நமது நாடு, மொழி முக்கியம் என்பதை உணர வேண்டும் என்றாா்.

தேசிய அமைப்பு பொதுச் செயலருடன் சந்திப்பு: பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் சென்னைக்கு வியாழக்கிழமை வந்துள்ளாா். தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் மற்றும் கட்சி நிா்வாகிகளுடன் சந்தித்துப் பேசியுள்ளாா். வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக அவா் ஆா்.எஸ்.எஸ். முக்கிய பிரமுகா்களையும் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.