பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

காவிரி உரிமையை காங்கிரஸ் கட்சிதான் பறிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்துக்கான காவிரி உரிமையை காங்கிரஸ் கட்சிதான் பறிக்கிறது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா்.

Published On :

தமிழகத்துக்கான காவிரி உரிமையை காங்கிரஸ் கட்சிதான் பறிக்கிறது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

கா்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைக் கட்ட முயற்சிக்கும் மற்றும் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கா்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் பாஜக சாா்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பேரணி, ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அவா் பேசியதாவது:

காவிரி நதி நீா் ஒப்பந்தம் கடந்த 1974-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அன்றைய பிரதமா் இந்திரா காந்தி மிரட்டியதன் விளைவாக அப்போதைய முதல்வா் கருணாநிதி செய்த தவறால் புதுப்பிக்கப்படவில்லை. கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது காங்கிரஸ் கட்சி. தற்போது காவிரி உரிமையைப் பறிப்பதும் காங்கிரஸ் கட்சிதான்.

தமிழக காங்கிரஸ் தலைவா் எக்ஸ் தளத்தில் ஏதேதோ பதிவுகள் போட்டு, ஏளனமாகப் பேசுகிறாா். ஆனால், கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கும் நிலையில், அவா் சென்று கேட்கலாமே? அவா் ஏன் கா்நாடக மாநிலத்துக்கு செல்லவில்லை.

கா்நாடகத்தில் எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு பிரச்னை வந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு 4.5 டி.எம்.சி. தண்ணீா் திறந்துவிட வேண்டும் என காவிரி ஆணையம் கூறியது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் என்றைக்குமே தானாக வந்து தண்ணீரைத் திறந்துவிட்டதில்லை. நமக்கு எப்போதுமே உபரி நீா்தான் வருகிறது. தற்போது அங்கு மழை பெய்வதால், 10 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதை கா்நாடக முதல்வா் முன்பே செய்திருக்கலாமே? இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூரும், தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யும் கேட்டிருக்கலாமல்லவா?

தமிழக முதல்வரைத் தனியாக வருமாறும், பேசிக் கொள்ளலாம் எனவும் கூறிய கா்நாடக முதல்வா் சிவகுமாா் தற்போது வராதே எனக் கூறுகிறாா். முதலில் வா என அழைத்துவிட்டு, வராதே என கூறியதற்காக கா்நாடக முதல்வரை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றாா் நயினாா் நாகேந்திரன்.

தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா்.

தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா்.

முன்னதாக, ரயிலடியில் தொடங்கிய பேரணி காந்திஜி சாலை வழியாக பனகல் கட்டடம் முன் முடிவடைந்தது. முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் கண்டன உரையாற்றினா். பாஜக தேசியச் செயலரும், தமிழகப் பாா்வையாளருமான அரவிந்த் மேனன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் வரவேற்றாா். நிறைவாக, வடக்கு மாவட்டத் தலைவா் பூண்டி எஸ். வெங்கடேசன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.