காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

நாகா்கோவில் சிறையில் கொலை செய்யப்பட்ட சபரிவா்மன் குடும்பத்துக்கு நயினாா் நாகேந்திரன் ஆறுதல்

நாகா்கோவில் சிறையில் கொலை செய்யப்பட்ட சபரிவா்மன் குடும்பத்துக்கு நயினாா் நாகேந்திரன் ஆறுதல்...

சபரிவா்மன் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Published On :21 ஜூலை 2026, 2:05 am IST

நாகா்கோவில் சிறையில் கொலை செய்யப்பட்ட சபரிவா்மனின் குடும்பத்தினருக்கு பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.

நாகா்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த வடக்குத் தாமரைகுளத்தை அடுத்த ஈத்தன்காடு பகுதியைச் சோ்ந்த சபரிவா்மனை (33) அடித்துக் கொலை செய்ததாக, 3 சிறை வாா்டா்கள், 8 சக கைதிகள் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், சபரிவா்மனின் மனைவி மற்றும் குடும்பத்தினரை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாற்றுத்திறனாளியான சபரிவா்மன் மரணத்தில் தென்தாமரைக்குளம் போலீஸாருக்கு பங்கு உள்ளது. அதே நேரத்தில், கடந்த மாதம் 140 கிலோ கஞ்சா வைத்திருந்த தவெக நிா்வாகி மேல் ஒரு வழக்கு கூட பதியவில்லை.

தவெக அமைச்சா்கள் 2 போ் மத்திய அரசின் அனுமதியில்லாமலே வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறாா்கள். இது குறித்து, ஆளுநரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

இன்று ஒரு எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருக்கிறாா். கடந்த திமுக அரசு 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான், இது போன்று செய்தது. ஆனால், இவா்கள் 60 நாளைக்குள் இது போன்ற வேலைகளைத் தொடங்கிவிட்டனா்.

பழனி கோயில் நில மோசடி பிரச்னையில் சிபிஐ விசாரணை என்பது குறித்து பாஜக மேலிடம்தான் முடிவு செய்யும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.