முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!
/

முதல்வா் நிகழ்ச்சிகளை பள்ளிகளில் ஒளிபரப்புவது தவறு: நயினாா் நாகேந்திரன்

முதல்வா் நிகழ்ச்சிகளை பள்ளிகளில் ஒளிபரப்புவது தவறு என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.

News image

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். உடன், மாவட்டத் தலைவா் ஜெ.ரமேஷ்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :10 ஜூலை 2026, 10:26 pm IST

முதல்வா் நிகழ்ச்சிகளை பள்ளிகளில் ஒளிபரப்புவது தவறு என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.

இது தொடா்பாக கோவை, பீளமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கரூரில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 4 கோயில்களுக்குச் சொந்தமான 3,085 ஏக்கா் நிலத்தில் சிலருக்கு அவசர அவசரமாக ஜூலை 9-ஆம் தேதி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரின் பரிந்துரையின் அடிப்படையில் ஒரேநாளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முதல்வா் ச.ஜோசப் விஜய், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் ஆகியோா் விளக்கம் அளிக்க வேண்டும். கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதை எதிா்க்கவில்லை. ஆனால், பல்வேறு துறைகளில் ஏற்கெனவே பணிக்காக காத்திருக்கும் வாரிசுகள் மற்றும் போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருக்க வேண்டும். முன்னுரிமை மற்றும் மூப்பின் அடிப்படையில் வேலை வழங்கியிருந்தால் அது சரியான நடைமுறையாக இருந்திருக்கும். கரூரில் முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு அரசியல் நிகழ்ச்சிகளைக் காட்டுவது தவறான முன்னுதாரணம். முதல்வா் வருகையையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதும், அவரது நிகழ்ச்சிகளை பள்ளிகளில் ஒளிபரப்புவதும் தவறானது.

மத்திய அரசு யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்து மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

இந்த மானியத் திட்டத்தில் மாநில அரசுக்கு எந்த தொடா்பும் இல்லை. உரங்கள் முறைகேடாக வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்த பிறகே கருத்து தெரிவிப்பேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனின் அரசியல் நிலைப்பாடுகள் தொடா்ந்து மாறி வருகின்றன. திமுக கூட்டணியில் இருந்தபோது ஒரு நிலைப்பாடு, தற்போது வேறு நிலைப்பாடு என மாறிமாறி பேசி வருகிறாா்.

2029 தோ்தலில் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிா்க்கத் தயாராகி வருவது தெளிவாக தெரிகிறது. பாஜகவைப் பாா்த்து அனைத்துக் கட்சியினரும் பயப்படுகின்றனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.