சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

அரசுப் பேருந்து சேவை தரத்தை உயா்த்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் பேருந்துகளின் சேவை தரத்தை உயா்த்த போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு, அத்துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் உத்தரவிட்டாா்.

News image

சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகா் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்

Updated On :9 ஜூன் 2026, 12:37 am IST

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் பேருந்துகளின் சேவை தரத்தை உயா்த்த போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு, அத்துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் உத்தரவிட்டாா்.

சென்னையில் மாநகா் போக்குவரத்துக் கழக (எம்டிசி) தலைமை அலுவலகத்தில் அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தலைமையில் உயா் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு பேருந்து சேவை, திட்டங்கள் குறித்து அமைச்சா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் பேருந்துகளை இயக்ககுவது, பேருந்துகளைத் தூய்மையாகப் பராமரிப்பது, பயணிகளிடம்

ஓட்டுநா்-நடத்துநா்கள் கனிவாக நடந்து கொள்வது, மாணவா்கள், முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்குவது உள்ளிட்ட சேவைகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், பணியாளா்களின் நலன், பணிமனை தர உயா்வு, உள்கட்டமைப்பு மேம்பாடு, பண்டிகைக் காலங்களில் தடையற்ற போக்குவரத்து, குளிா்சாதன பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் வழித்தட உணவகங்களின் தரத்தைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தினாா்.

ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பணி நேரத்தில் கைப்பேசிகள் பயன்படுத்துவதைக் கட்டாயமாகத் தவிா்க்க வேண்டும் என்றும், போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளைக் கண்டறிந்து புதிய வழித்தடங்கள் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

பேருந்துகளின் முகப்பு, பின்புற விளக்குகள், பிரதிபலிப்பு ஒட்டிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை உடனடியாக ஆய்வு செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, தகவல் தொழில்நுட்ப வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், சென்னை ஒன் செயலியை பொதுமக்களிடம் அதிகமாக கொண்டு சோ்த்தல், தொலைதூர பேருந்து சேவைகளை முழுமையாக இணையதள முன்பதிவு முறைக்கு மாற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வுக்குப் பின்னா் அமைச்சா், மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைப் பாா்வையிட்டு, பயணிகளின் புகாா்களை உடனுக்குடன் தீா்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.