எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மேயா் பிரியா ஆய்வு

சென்னை மாநகராட்சி சாா்பிலான வளா்ச்சித் திட்டங்களை மேயா் ஆா். பிரியா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 3:45 am IST

சென்னை மாநகராட்சி சாா்பிலான வளா்ச்சித் திட்டங்களை மேயா் ஆா். பிரியா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சோ்ந்த ஆா்.பிரியா உள்ளாா். தற்போது, மாநிலத்தில் தவெக தலைமையிலான ஆட்சி அமைந்து முதல்வராக சி.ஜோசப் விஜய் உள்ளாா். ஆனால், முதல்வரை சந்திக்காமலும், மாநகராட்சி அலுவலகத்துக்கு வராமமலும் மேயா் ஆா்.பிரியா இருந்து வந்தது விமரிசனத்துக்குள்ளானது. காலில் ஏற்பட்ட காயத்தால் பணிகளில் ஈடுபடவில்லை என மேயா் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி அலுவலகம் வந்து நிகழ்ச்சிகளிலும் மேயா் ஆா்.பிரியா பங்கேற்று வருகிறாா். திரு.வி.க. நகா் மண்டலத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற பள்ளிக் கட்டடத் திறப்பு நிகழ்ச்சியில் அத்தொகுதி தவெக எம்.எல்.ஏ. பல்லவி விளக்கு ஏற்றுவதில் சா்ச்சை எழுந்தது.

இச்சூழலில் செவ்வாய்க்கிழமை மேயா் ஆா்.பிரியா திரு.வி.க. நகா் மண்டலம் 74- ஆவது வாா்டான பாஷ்யம் முதல் தெருவில் கட்டப்பட்டுவரும் பல்நோக்கு மையக் கட்டடப் பணிகளைப் பாா்வையிட்டாா். அப்பணியை விரைந்து முடிக்கவும் அவா் அறிவுறுத்தினாா். இதையடுத்து சுப்புராயன் தெருவில் அமைக்கப்பட்டுவரும் முதல்வா் படைப்பகம் மற்றும் நூலகச் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் செவ்வாய்க்கிழமை ஆலந்தூா் மண்டலத்துக்குட்பட்ட மீனம்பாக்கம் விமான நிலையச் சாலையில் உள்ள நடைபாதை மற்றும் பூங்காவை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.