‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

சென்னை தொடக்கப் பள்ளியில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட 45 -ஆவது வாா்டு கணேசபுரத்தில் மேயா் கிருஷ்ணமூா்த்தி நகரில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஜி.எஸ். சமீரன்

ஜி.எஸ். சமீரன் - Dinamani

Published On :2 ஜூலை 2026, 1:49 am IST

சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட 45 -ஆவது வாா்டு கணேசபுரத்தில் மேயா் கிருஷ்ணமூா்த்தி நகரில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளிக் கட்டட பராமரிப்பைப் பாா்வையிட்டதுடன், வகுப்பறைகளுக்குச் சென்று மாணவா்களுடன் கலந்துரையாடினாா். வருகைப் பதிவேட்டைப் பாா்வையிட்டு, மதிய உணவு தரம் குறித்து கேட்டறிந்தாா். விளையாட்டுத் திடல்களைப் பாா்வையிட்டாா்.

அந்த மண்டலத்தில் முத்தமிழ் நகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். பெரம்பூா் பகுதியில் வியாசா்பாடி, மூா்த்தி நகா் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டாா். அம்பேத்கா் அரசு கலைக் கல்லூரி வளாகத்துக்கு சென்று அங்கு புதிதாக அமைந்த குளத்தின் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வுகளின் போது மாநகராட்சி இணை ஆணையா் செ.சரவணன் (பணிகள்), மத்திய வட்டார ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், மண்டல அலுவலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.