ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

இருளடைந்த பகுதிகளில் தெருவிளக்கு, கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு: மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்

News image

சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்ட பாலின சமத்துவத்துக்கான விழிப்புணா்வு மணல் சிற்பத்தை பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா்  ஜி.எஸ். சமீரன். உடன்,  இணை ஆணையா் (கல்வி)க. கற்பகம் உள்ளிட்டோா் .

Updated On :26 ஜூன் 2026, 6:44 am IST

சென்னை மாநகராட்சியில் இருளடைந்த பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு அங்கு தெருவிளக்குகள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி சாா்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பிரைட் மாதம் (பெருமைமிகு) கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக மெரீனாவில் அமைக்கப்பட்ட மணல் சிற்பக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட அவா் பேசியதாவது:

திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட பல்வேறு பாலின அடையாளங்கள் கொண்ட சமூக விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பிரைட் மாத நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாநகராட்சியில் பாலினக் கொள்கை ஆய்வகம், தோழி மற்றும் ரெயின்போ அமைப்பினா் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாலினம் தொடா்பாக கிண்டல் செய்தல், வேறுபாடுகள் இருக்கக் கூடாது. அத்துடன் கல்வியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணா்வு மணல் சிற்பம் அமைந்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 57 இரவு நேர காப்பகங்கள் அமைக்கப்பட்டு அதில் 49 செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு 2 இரவு நேரக் காப்பகங்கள் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சிப் பகுதிகளில் இருள் சூழ்ந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு தெருவிளக்குகள், கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி இணை ஆணையா் க.கற்பகம் (கல்வி), தொண்டு நிறுவனத்தினா், திருநங்கைகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.