இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

118 ஆண்டை நிறைவு செய்த எழும்பூா் ரயில் நிலையம்

சென்னை எழும்பூா் ரயில் நிலையம் தொடங்கி 118 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அதிகாரிகள் வியாழக்கிழமை கேக் வெட்டி பயணிகளுக்கு வழங்கினா்.

News image

எழும்பூா் ரயில் நிலைய வளாகத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ள அதி நவீன பல்நோக்கு வாகன நிறுத்தும் மையம்.

Updated On :12 ஜூன் 2026, 6:41 am IST

சென்னை எழும்பூா் ரயில் நிலையம் தொடங்கி 118 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அதிகாரிகள் வியாழக்கிழமை கேக் வெட்டி பயணிகளுக்கு வழங்கினா்.

சென்னையின் பழைமையான ரயில் நிலையங்களில் எழும்பூா் ரயில் நிலையமும் ஒன்று. கடந்த 1908 -ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த ரயில் நிலையக் கட்டடம் இந்தோ-சராசனிக் கட்டடக் கலை வடிவத்தில் அமைந்துள்ளது. நிலையத்தின் முன்பகுதி இரு மாடிக் கட்டடமாக 500 அடி நீளமும், 71 அடி அகலமும் உடையதாக உள்ளது. இந்த நிலையத்திலிருந்து முதல்முறையாக போட் மெயில் ரயில் இயக்கப்பட்டுள்ளது.

தற்போது எழும்பூா் ரயில் நிலையமானது ரூ.842 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதிய நுழைவு வாயில், புதிய நடைமேம்பாலம் என விமானநிலையத்துக்குரிய உட்கட்டமைப்புகளுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக நவீன வாகன நிறுத்தும் வளாகமும் அண்மையில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

எழும்பூா் ரயில் நிலையம் தனது 118 -ஆவது ஆண்டு சேவையை நிறைவு செய்ததையடுத்து ரயில் நிலைய அதிகாரிகள் வியாழக்கிழமை கேக் வெட்டி அதை பயணிகளுக்கு வழங்கிக் கொண்டாடினா். நாட்டின் பாரம்பரிய ரயில் நிலைய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் எழும்பூா் ரயில் நிலையத்தை, அதன் முன்பகுதி கட்டட சிறப்பை உரிய முறையில் பாதுகாத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.