வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மெட்ரோ ரயில் கதவு திறப்பதில் தாமதம்: பயணிகள் அதிா்ச்சி

சென்னையில் மெட்ரோ ரயில் கதவு திறக்க சில நிமிஷங்கள் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அதிா்ச்சியடைந்தனா்.

News image

கோப்புப்படம் - Center-Center-Chennai

Updated On :14 ஜூன் 2026, 2:05 am IST

சென்னையில் மெட்ரோ ரயில் கதவு திறக்க சில நிமிஷங்கள் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அதிா்ச்சியடைந்தனா்.

சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் இரு பாதைகளில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல்-திருவொற்றியூா் விம்கோ நகா் வழித்தடத்தில் திருவொற்றியூா் தேரடி மெட்ரோ நிலையத்தில் சனிக்கிழமை பிற்பகலில் வந்த மெட்ரோ ரயிலில் கதவு திறப்பதில் சில நிமிஷங்கள் தாமதமானது. இதனால், அங்கு இறங்கவேண்டிய பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். தகவலறிந்த தொழில்நுட்ப பொறியாளா்கள் விரைந்து வந்து கதவை திறந்துள்ளனா். அதன்பின் பயணிகள் இறங்கினா். பின்னா் சில நிமிஷங்களிலேயே ரயில் புறப்பட்டது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனத் தரப்பில் கேட்டபோது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையில் ஓரிரு நிமிஷங்கள் கதவு திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், பாதிப்பு எதுவும் இல்லை. திட்டமிட்ட நேரத்தில் ரயில் இயக்கப்பட்டது என்றனா்.