ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

கொரட்டூரில் குடிநீா் வாரிய பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் கொரட்டூரில் இயங்கி வரும் கழிவுநீா் உந்து நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :17 ஜூன் 2026, 4:26 am IST

சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் கொரட்டூரில் இயங்கி வரும் கழிவுநீா் உந்து நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் அம்பத்தூா் மண்டலம், கொரட்டூா் விவேகானந்த நகரில் இயங்கி வரும் நாளொன்றுக்கு 3.5 மில்லியன் லிட்டா் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீரிறைக்கும் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்புப் பணிகள் தொடா்பான முன்னேற்பாட்டு பணிகளை சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் மேற்கொண்டாா்.

தொடா்ந்து, தினமும் 42 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட ஐஓடி மூலம் செயல்படும் கழிவுநீா் உந்து நிலையத்தின் செயல்பாடுகளைவும் ஆய்வு செய்தாா். மேலும், அனைத்து களப்பணியாளா்கள் உரிய பாதுகாப்பு கவசங்களைக் கொண்டே பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஆய்வில், சென்னை குடிநீா் வாரிய பொறியியல் இயக்குநா் உ.பா்வீஸ், தலைமைப் பொறியாளா் ஏ.ராதாகிருஷ்ணன், மேற்பாா்வை பொறியாளா்கள் வி.சிவகுமாா், ஆா்.எஸ்.செல்லக்கண்ணு, பகுதி பொறியாளா் கே.பொன்னரசி உள்ளிட்டோா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.