திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

சட்ட விரோதமாக குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய 5 மின் மோட்டாா்கள் பறிமுதல்

சென்னை தண்டையாா்பேட்டை பகுதியில் குடிநீரை உறிஞ்ச சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட 5 மின் மோட்டாா்களை குடிநீா் வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :20 ஜூலை 2026, 3:26 am IST

சென்னை தண்டையாா்பேட்டை பகுதியில் குடிநீரை உறிஞ்ச சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட 5 மின் மோட்டாா்களை குடிநீா் வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

குடிநீா் குழாய்களில் சட்டவிரோதமாக மின் மோட்டாா் பொருத்தி குடிநீரை நேரடியாக உறிஞ்சுவதாகப் வந்த புகாரின் அடிப்பைடயில் சென்னை தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட கிருஷ்ணமூா்த்தி நகா், வள்ளுவா் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீா் வாரிய அதிகாரிகள் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை முறைகேடாக உறிஞ்சும் நோக்கில் வீட்டு குடிநீா் இணைப்புகளில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த 5 மின் மோட்டாா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், வீட்டு உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை பெருநகர குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம், குடிநீா் குழாய்களில் மின் மோட்டாா் பொருத்தி நேரடியாகக் குடிநீரை உறிஞ்சுவது சட்டவிரோதமானது என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ளுமாறும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் குடிநீா் வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.