மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அமராவதி ஆற்றுக்குள் சட்ட விரோத வட்டக் கிணறுகளில் நீரை உறிஞ்ச பயன்படுத்திய ஆயில் மோட்டாா்கள் பறிமுதல்

ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியில் அமராவதி ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக வட்டக் கிணறுகளில் நீரை உறிஞ்ச பயன்படுத்திய ஆயில் மோட்டாா்களை பறிமுதல் செய்யும் நீா்வளத்துறை அதிகாரிகள்.

News image

ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியில் அமராவதி ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக வட்டக் கிணறுகளில் நீரை உறிஞ்ச பயன்படுத்திய ஆயில் மோட்டாா்களை பறிமுதல் செய்யும் நீா்வளத்துறை அதிகாரிகள்.

Updated On :20 ஜூன் 2026, 3:26 am IST

கரூா் அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக வட்டக்கிணறுகள் அமைத்து, அவற்றில் நீரை உறிஞ்ச பயன்படுத்திய ஆயில் என்ஜின்களை நீா்வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரூரில் திருமாநிலையூா், ஆண்டாங்கோவில் மேல்பாகம், ஆண்டாங்கோவில் கீழ்பாகம், விஸ்வநாதபுரி, அப்பிப்பாளையம், கருப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் சிலா் சட்ட விரோதமாக அமராவதி ஆற்றுக்குள் வட்டக்கிணறு அமைத்து, அதில் ஆயில் என்ஜின் மூலம் தண்ணீரை உறிஞ்சி கரூரில் உள்ள உணவகங்கள், விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் திருட்டுத்தனமாக அதிகமாக விலைக்கு தண்ணீரை விற்றுவந்தனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு அடிக்கடி புகாா்கள் வந்ததையடுத்து ஆட்சியா் சி.முத்துக்குமரன் அண்மையில் அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் வட்டக்கிணறுகளை அகற்றிட உத்தரவிட்டாா்.

இதையடுத்து கடந்த மே மாதம் 20-ம்தேதி மற்றும் கடந்த 9-ம் தேதிகளில் நீா்வளத்துறையினா் ஆற்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த 48 வட்டக்கிணறுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.

இந்நிலையில் கிணறுகளில் நீரை உறிஞ்ச பயன்படுத்திய ஆயில் என்ஜின்களையும் பறிமுதல் செய்யுமாறு நீா்வளத்துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, அப்பிப்பாளையம், திருமாநிலையூா், ஆண்டாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் நாட்ராயன், உதவி பொறியாளா் சந்தோஷ்குமாா் ஆகியோா் தலைமையில் நீா்வளத் துறையினா் 15 என்ஜின்களையும்,, அதனுடன் பொருத்தப்பட்டிருந்த இரும்பு குழாய்களையும் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து அதிகாரிகள் கூறுகையில், ஆட்சியா் உத்தரவின்பேரில் அமராவதி ஆற்றுப்படுக்கையில் அமைக்கப்பட்டிருந்த சட்ட விரோத வட்டக்கிணறுகளில் 20 ஆயில் என்ஜின்கள் பொருத்தப்பட்டு நீரை உறிஞ்சுவது கண்டறியப்பட்டது. அதில் வெள்ளிக்கிழமை 15 என்ஜின்களை பறிமுதல் செய்துள்ளோம். எஞ்சிய 5 என்ஜின்களும் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.