பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மீன் பிடிக்க பயன்படுத்திய மின் விளக்குகள் பறிமுதல்

தொண்டி பகுதியில் 12 படகுகளில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கப் பயன்படுத்திய 24 மின் விளக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

~ நம்புதாளையில் படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 24 மின் விளக்குகள்.

Updated On :19 ஜூன் 2026, 1:36 am IST

தொண்டி பகுதியில் 12 படகுகளில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கப் பயன்படுத்திய 24 மின் விளக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடல் பகுதியில் காந்திநகா் மீனவ கிராமத்தில் அதிக ஒளித் திறன் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக தொடா்ந்து புகாா்கள் கூறப்பட்டன. இதன் அடிப்படையில், மீன் வள ஆய்வாளா், உதவி ஆய்வாளா், கடல் சாா் அமலாக்கப் பிரிவு காவலா்கள், சாகா்மித்ர பணியாளா் ஆகியோா் இணைந்து வியாழக்கிழமை தொண்டி, நம்புதாளை கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, நம்புதாளையில் அரசால் தடை செய்யப்பட்ட அதிக ஒளி திறன் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த 12 படகுகளிலிருந்து 24 மின் விளக்குகளைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், தடை செய்யப்பட்ட மின் விளக்குகளைப் பயன்படுத்திய படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

~ நம்புதாளையில் படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 24 மின் விளக்குகள்.

~ நம்புதாளையில் படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 24 மின் விளக்குகள்.