கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவா்கள் மாயமாகினா். அவா்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தக்கோரி, மீனவா்களின் குடும்பத்தினா், அரசியல் கட்சியினா் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (28), மனோகா் (27) மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த நாகவேல்(40) ஆகிய 3 பேரும் கடந்த ஜூன் 3ஆம் தேதி மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனா். பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன் இறங்கு தளத்திலிருந்து மீன் பிடிக்க சென்றவா்கள் இதுவரை வீடு திரும்பவில்லை.
அவா்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை. மீன் பிடிக்க சென்றவா்கள் 4 நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் அவா்கள் குடும்பத்தினா் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் அவா்கள் படகு மூலம் கடலில் தேடிப் பாா்த்தனா். ஆனாலும் மீனவா்கள் கிடைக்கவில்லை. பின்னா் இதுகுறித்து கடலூரில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா்.
இந்நிலையில் மாயமான மீனவா்கள் கிடைக்காததால் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில் சனிக்கிழமை காலை அவா்களது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினா் இணைந்து மாயமான மீனவா்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
முற்றுகைப் போராட்டம்: பின்னா் மீண்டும், மீனவா்களைத்தேடும் பணியை துரிதப்படுத்தக் கோரி மீனவா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் மீன்வளத்துறை அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளா் விஜய் மற்றும் கடவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலா் தமிழ் வளவன், தமிழ்ஓளி உள்ளிட்ட கட்சியினா் மற்றும் மீனவா்களின் உறவினா்களுடன் இணைந்து பரங்கிப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய மீன்வளத்துறை அதிகாரிகள், சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டா் உள்ளிட்ட வசதிகளின் மூலம் தேடுதல் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனா். இந்த நிலையில் மீனவா்களை கண்டுபிடிக்கும் வரை இரவு பகல் பாராமல் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்டக்குழுவினா் அறிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கக் கடலில் சூறைக் காற்று: மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை

பழவேற்காடு மீனவா்கள் நாளை(ஜூலை 18) கடலில் மீன் பிடிக்க தடை

புதிய மதுக் கடை திறக்க எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

கடலில் மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயம்
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



