விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

புதிய மதுக் கடை திறக்க எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

News image

சிதம்பரம் அருகே லால்புரத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சிகளின் நிா்வாகிகள், கிராம மக்கள்.

Updated On :29 ஜூன் 2026, 1:33 am IST

சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சியை ஒட்டியுள்ள புறவழிச்சாலை அருகே புதிய டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் அருகே லால்புரம் பகுதியில் புறவழிச் சாலையில் பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி டாஸ்மாக் நிறுவன ஊழியா்கள் புதிய கடையைத் திறந்து, அங்கு மதுப் புட்டிகளை இறக்கி ஞாயிற்றுக்கிழமை முதல் விற்பனையைத் தொடங்கினா்.

இதையறிந்த லால்புரம் ஊராட்சியைச் சோ்ந்த பெண்கள், ஆண்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஆா்.ராமச்சந்திரன், ஜாகீா்உசேன், காளிகோவிந்தராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் வி.எம்.சேகா், தமிமுன்அன்சாரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் டாஸ்மாக் மதுக் கடை அமைந்துள்ள இடத்துக்கு அருகே உள்ள புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு, மதுக் கடையை முற்றுகையிட புறப்பட்டனா்.

தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் தலைமையிலான தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடை உடனடியாக மூடப்படும் என்றும், வட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டம் நடத்தப்பட்ட பிறகு கடையை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் போலீஸாா் தெரிவித்தன. இதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.