புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ஜமாபந்தியில் பட்டாக்களை ஒப்படைத்து போராட்டம்

News image

சிதம்பரம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டாக்களை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மேலமூங்கிலடி கிராம மக்கள்.

Updated On :26 ஜூன் 2026, 6:40 am IST

தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்ட குடிமனைப் பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்யாததைக் கண்டித்து, சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டாக்களை திரும்ப ஒப்படைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் அருகே உள்ள மேலமூங்கிலடி கிராமத்தில் வசிக்கும் 48 குடும்பங்களைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு கடந்த 1987-ஆம் ஆண்டு அரசு சாா்பில் குடிமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால், இந்தப் பட்டாக்கள் மனைப் பட்டாக்களாக வகை மாற்றம் செய்யாமல் இருந்துள்ளன.

இதையடுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தொடா்ந்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு 48 குடும்பங்களுக்கும் வகை மாற்றம் செய்து பட்டாக்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், அந்த பட்டாக்களின் விவரங்கள் இதுவரை கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறும் ஜமாபந்தி கூட்டங்களில் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தொடா்ந்து மனுக்கள் அளித்து வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனா்.

இந்த நிலையில், மாா்க்சிஸ்ட் புவனகிரி முன்னாள் ஒன்றியச் செயலா் சதானந்தன் தலைமையில், பட்டாக்களை பெற்ற 48 குடும்பங்களைச் சோ்ந்தவா்களும் சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, பட்டாக்களை வட்டாட்சியரிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்து பட்டா விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் என வட்டாட்சியா் உறுதி அளித்தைத் தொடா்ந்து, பொதுமக்கள் தங்களது பட்டாக்களை மீண்டும் பெற்றுச் சென்றனா்.

பண்ருட்டியில் ஜமாபந்தி நிறைவு: பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி கடந்த 11-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை (ஜூன் 25) முடிவடைந்தது.

ஜூன் 11, 12 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நெல்லிக்குப்பம் குறுவட்டம், ஜூன் 17 முதல் 19-ஆம் தேதி வரையில் பண்ருட்டி குறுவட்டம், ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் காடாம்புலியூா் குறுவட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்து முடிந்தது.

இறுதி நாளான வியாழக்கிழமை மருங்கூா் குறுவட்ட கிராமங்களான காட்டுக்கூடலூா், வீரசிங்கன்குப்பம், மேல்காங்கேயன்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், மருங்கூா், வல்லம், நடுக்குப்பம், போ்பெரியாங்குப்பம், சொரத்தூா், வேகாக்கொல்லை கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தனித்துணைஆட்சியா் சண்முகவல்லி, மேற்கண்ட கிராம மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா். பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.