நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி வண்டிச்சோலை கிராம மக்கள் போராட்டம்

News image

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வண்டிச்சோலை கிராம மக்கள்.

Updated On :21 ஜூன் 2026, 1:25 am IST

வண்டிச்சோலை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குன்னூா்-கோத்தகிரி மாநில நெடுஞ்சாலையில் வண்டிச்சோலை பகுதி உள்ளது. இங்கு கோயில்கள், மகளிா் கல்லூரி, குடியிருப்புகள், நியாயவிலைக் கடை அமைந்துள்ள பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வந்தனா்.

இதைத்தொடா்ந்து டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தும் தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வண்டிச்சோலை பகுதி மக்கள் ஆத்திரமடைந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். உயா் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக டாஸ்மாக் நிா்வாகம் உறுதி அளித்ததால் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

ஜூலை 5-ஆம் தேதிக்குள் டாஸ்மாக் மதுக்கடை அகற்றப்படாவிட்டால், 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.