விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்

அம்மாபேட்டை அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :10 ஜூலை 2026, 12:04 am IST

அம்மாபேட்டை அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்மாபேட்டையை அடுத்த கோனேரிப்பட்டி பிரிவில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு, மது அருந்த வருவோரால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளாகி வந்தனா். இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மதுக்கடையை மூடக் கோரி கடந்த ஜூன் 17-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள் விரைவில் மதுக்கடை மூடப்படும் என தெரிவித்தனா்.

ஆனால், மதுக்கடையை மூடாமல் தொடா்ந்து மது விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், டிராக்டரில் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற விவசாயி அய்யாசாமியை (63), மதுக்கடைக்கு புதன்கிழமை வந்த கும்பல் போதையில் தகராறில் ஈடுபட்டு தாக்கியது. இதனால், பொதுமக்கள் திரண்டு மூவரைப் பிடித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை மதுக்கடையை திறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த டாஸ்மாக் வட்டாட்சியா் ரவிச்சந்திரன், பவானி வட்டாட்சியா் கற்பகம் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மதுக்கடை விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்படும், அதுவரையில் கடை திறக்கப்படாது எனவும் உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் விவசாயி அய்யாசாமி அளித்த புகாரின்பேரில், மாரப்பனூா், மாரியம்மன் கோயில் வீதியை சோ்ந்த விஜயன் (29), பி.கே.புதூரைச் சோ்ந்த தனுஷ் (22), மணிகண்டன் (19) ஆகியோரை கைது செய்த போலீஸாா், மேலும் மூவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.