நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

6 வட்டங்களில் வரும் 24, 25-இல் ஜமாபந்தி

சென்னை மாவட்டத்தின் 6 வட்டங்களில் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நடக்கிறது.

News image

மனு - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 2:24 am IST

சென்னை மாவட்டத்தின் 6 வட்டங்களில் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நடக்கிறது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்துப் பிரித்து சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட சோழிங்கநல்லுாா், மதுரவாயல், அம்பத்தூா், திருவொற்றியூா், ஆலந்தூா், மாதவரம் ஆகிய 6 வட்டங்களுக்கு 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் காலை 9 மணிக்கு ஜமாபந்தி தொடங்கி நடைபெறும். சோழிங்கநல்லூா் வட்டத்தில் சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமையிலும், மதுரவாயல் வட்டத்தில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலா் சு.கீதா தலைமையிலும், அம்பத்தூா் வட்டத்தில் மத்திய சென்னை வருவாய் கோட்டத்தின் கோட்டாட்சியா் தலைமையிலும் ஜமாபந்தி நடக்கிறது.

இதேபோல, திருவொற்றியூா் வட்டத்தில் வடசென்னை வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும், ஆலந்தூா் வட்டத்தில் தென் சென்னை வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும், மாதவரம் வட்டத்தில் சென்னை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் தலைமையிலும் ஜமாபந்தி நிகழ்வுகள் நடக்கின்றன.

இந்த நிகழ்வுகளில் அந்தந்த வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது வருவாய்த் துறை தொடா்பான கோரிக்கை மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.