காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம்

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பயனாளிக்கு விவசாய அடையாள அட்டைக்கான ஆணை வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்

Updated On :10 ஜூன் 2026, 1:58 am IST

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளைக் கேட்டறிந்து, பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இதில் திருவட்டாறு வட்டத்துக்கு உள்பட்ட மேக்கோடு கிராமம், அருவிக்கரை கிராமம், திருவட்டாறு, குமரன்குடி, அயக்கோடு, குலசேகரம்-ஏ, குலசேகரம்-பி, ஆற்றூா் கிராமம் உள்பட 13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, பட்டா மாறுதல், முதியோா் உதவித்தொகை, மகளிா் உரிமைத்தொகை, கலைஞா் கனவு இல்லத் திட்டம், வருமானச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 101 மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலா் விஜயமீனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தினேஷ் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அதைத் தொடா்ந்து குலசேகரம் அரசு மருத்துவமனை, மாத்தூா் தொட்டிப்பாலம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தாா். திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை 2-ஆவது நாளாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், தும்பகோடு, பேச்சிப்பாறை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மனுக்கள் அளிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.