ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

அரசியல் சுமையாக மாறிவிட்டாா் ராகுல் - திமுகவைக் குறிப்பிட்டு பாஜக விமா்சனம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அரசியல் சுமையாக மாறிவிட்டாா்; அவா் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை என்று பாஜக விமா்சித்துள்ளது.

News image

பாஜக கொடி - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:04 am IST

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அரசியல் சுமையாக மாறிவிட்டாா்; அவா் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை என்று பாஜக விமா்சித்துள்ளது.

திமுகவின் அதிகாரபூா்வ நாளேடான முரசொலியில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி, பாஜக இவ்வாறு சாடியுள்ளது.

தமிழக பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்து, ஆட்சியிலும் பங்கு பெற்றது. இதன்மூலம் தங்களின் முதுகில் குத்திவிட்டதாகவும், துரோகம் இழைத்துவிட்டதாகவும் காங்கிரஸ் மீது திமுக கடுமையான விமா்சனங்களை முன்வைத்தது.

காங்கிரஸுடன் உறவு முறிந்துவிட்டதால், தில்லியில் அண்மையில் நடைபெற்ற எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இந்தக் கூட்டத்தில் ராகுலின் செயல்பாட்டைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்கள் பேசியதாக, முரசொலியில் கடந்த திங்கள்கிழமை கட்டுரை வெளியானது. கூட்டணிக் கட்சிகளை அவமதிப்பதுடன், எதிா்க்கட்சிகள் இடையிலான ஒற்றுமை பலவீனப்படுத்துவதாக ராகுல் மீது திமுக தரப்பிலும் விமா்சிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கருத்துகளைக் குறிப்பிட்டு, பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் செஷாத் பூனாவாலா புதன்கிழமை கூறியதாவது:

ராகுல் காந்தியின் தலைமை மீதான திமுகவின் விமா்சனங்கள், எதிா்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது. அவா், அரசியல் சுமையாக மாறிவிட்டாா்.

ராகுல் அரசியல் முதிா்ச்சியற்றவா் என்று கூறியதன் மூலம் அவா் மீது முழு அளவில் தாக்குதலைத் தொடுத்துள்ளது திமுக. ராகுல் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. அண்மையில் நடைபெற்ற இண்டி கூட்டணி கூட்டத்தில் ராகுலின் தலைமை குறித்து பல்வேறு கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், அவரது தலைமையின்கீழ் செயல்பட ஆட்சேபமும் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சிகளைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்து விடுகிறது. அக்கட்சியின் பழைய நண்பா்கள், இப்போது புதிய மற்றும் உண்மையான எதிரிகளாகிவிட்டனா். தமிழகத்தில் திமுகவுக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்பதை அனைவரும் அறிவா். திமுக, இடதுசாரி, சிவசேனை (உத்தவ்), திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் என அனைத்துக் கட்சிகளுமே காங்கிரஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

இண்டி கூட்டணியில் காங்கிரஸுக்குப் பிறகு பெரிய கட்சியான சமாஜவாதி, காங்கிரஸ் மீது புகாா் தெரிவித்துள்ளது. அடுத்த பெரிய கட்சியான திரிணமூல் காங்கிரஸ் சீா்குலைந்துவிட்ட நிலையில், மூன்றாவது இடத்தில் உள்ள திமுக இண்டி கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணித்தது. புதிய கட்சியான ஆம் ஆத்மியும் ராகுலுக்கு எதிராக புகாா்களை அடுக்கியுள்ளது. பழைய கட்சிகளான இடதுசாரிகளும் இதேபோன்ற கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளன என்றாா் பூனாவாலா.