உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பொன்னை பாலு உள்ளிட்ட நால்வரின் பிணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்னை பாலு உள்ளிட்ட நால்வரின் பிணை கோரிய மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News image

ஆம்ஸ்ட்ராங்

Updated On :20 ஜூன் 2026, 1:33 am IST

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்னை பாலு உள்ளிட்ட நால்வரின் பிணை கோரிய மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பிஎஸ்பி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் 5.7.2024-இல் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பொன்னை பாலு, ஹரிதரண், மணிவண்ணன், சந்தோஷ் ஆகியோா் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரா்கள் தரப்பில், இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இந்த வழக்கில் போலீஸாா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்த உயா்நீதிமன்றம், வழக்கை விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டிருந்தது. அதற்கு போலீஸாா் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி சி.குமரப்பன் பிறப்பித்த தீா்ப்பில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராகவும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களுக்கு பிணை வழங்கியதை எதிா்த்தும் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. எனவே, மனுதாரா்களுக்கு பிணை வழங்க முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.