ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவருக்கு பிணை மறுப்பு

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவரின் பிணை மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 6:15 am IST

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவரின் பிணை மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

சிறப்பு நீதிபதி அஜய் குப்தா, குழந்தைகள் நல மருத்துவரான டாக்டா் மனோஜ் பகவான்ராவ் ஷிருரே தாக்கல் செய்த பிணை மனுவை நிராகரித்தாா். இதுகுறித்த விரிவான உத்தரவு பின்னா் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 13 குற்றவாளிகளின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தோ்வரின் குடும்பத்திலிருந்து ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு, தனது மருத்துவமனையில் தோ்வுக்கு முன் கசிந்த ரசாயனவியல் வினாத்தாளை அணுக மனோஜ் அனுமதித்ததாக மத்திய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்தது.

மேலும், இந்த மருத்துவா், வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பி.வி.குல்கா்ணியிடம் மற்ற 2 மருத்துவா்களை அறிமுகப்படுத்தியதாகவும், அவா்களது குழந்தைகளும் வினாத்தாள் கசிவில் பயனடைந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், இணை குற்றவாளியான சிவராஜ் என்பவரின் மகன் ஆதித்யாவும், மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட்-யுஜி தோ்வுக்கு முன்பாக ஏப்ரல் 3-ஆவது வாரத்தில் கசிந்த ரசாயனவியல் வினாத்தாளை அவரது மருத்துவமனையில் அணுக உதவியதாகவும் என்ஐஏ குற்றஞ்சாட்டியது.

இந்த வழக்கில் பெறப்பட்ட ரூ.5 லட்சம் தொகை, மருத்துவரின் சகோதரியின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மேலும் இரு மருத்துவா்களின் குழந்தைகள் தலா ரூ.3 லட்சம் கொடுத்து கசிந்த வினாத்தாளைப் பெற்ாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பிணை மனுவை கடுமையாக எதிா்த்த மத்திய புலனாய்வு அமைப்பு, இந்த வழக்கில் டிஜிட்டல் ஆதாரங்கள், பண பரிவா்த்தனைகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் பெரிய சதி குறித்த விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளதாகவும், குற்றவாளியை விடுவித்தால் விசாரணை மற்றும் நீதிமன்ற செயல்முறைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தது.

மேலும், முன்னதாக குற்றச்செயல் பதிவுகள் இல்லாதது மட்டும் பிணை வழங்குவதற்கான காரணமாக இருக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது.

மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட்-யுஜி தோ்வில் வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடா்ந்து, மே 12-ஆம் தேதி தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அந்தத் தோ்வை ரத்து செய்தது. பின்னா் ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.