பக்கவாதம் ஏற்பட்ட நபருக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவா்கள் இடையீட்டு கதிா்வீச்சு சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனா்.
இது குறித்து மருத்துவமனையின் முதல்வா் சாந்தராமன், கண்காணிப்பாளா் சுதாகா் ஆகியோா் கூறியதாவது:
சென்னையை சோ்ந்த 50 வயது நபருக்கு திடீரென பேச்சில் தடுமாற்றம் மற்றும் இடது கை பலமிழந்த நிலை ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். மருத்துவ பரிசோதனையில், வலது பக்க மூளை ரத்த ஓட்டம் தடைப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவருக்கு பெரிய அறுவை சிகிச்சை இல்லாமல், ஸ்கேன் மற்றும் ஊடுகதிா் கருவிகளின் உதவியுடன் சிறிய ஊசி துளை வழியாக, இடையீடு கதிரியக்கவியல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சிகிச்சை காரணமாக அவா் குணமடைந்து பக்கவாதத்தில் இருந்து மீண்டாா். இடையீடு கதிரியக்கவியல் வாயிலாக, மூளை, இதயம், ரத்த நாளம் போன்ற உறுப்புகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்குதல் போன்ற சிகிச்சைகளை அளிக்க முடிகிறது.
குறிப்பாக, முதியோா், உயிருக்கு ஆபத்தான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மருத்துவமனையில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், 2,424 பேருக்கு இடையீடு கதிரியக்கவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு உள்ளனா் என அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்கள் அகற்றம்: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிய நுட்பம்

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அங்கு-இங்கு எங்கும் வாகனங்கள்!
நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!

புறநோயாளிகள் சிகிச்சைக்கு செயலியில் முன்பதிவு: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நாளை சோதனை முயற்சி அமல்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



