சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் வரும் ஜூன் 26-இல் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
சென்னையின் பழைய காவல் ஆணையரக வளாகம் பாரம்பரிய கட்டடமாக அறிவிக்கப்பட்டு, புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த 2021 செப். 28 முதல் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் காவல்துறையினா் பயன்படுத்திய சீருடைகள், பதக்கங்கள், ஆயுதங்கள், தளவாடங்கள், காவல் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறைச் சாலை வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது.
இதுவரை பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் என சுமாா் 1.94 லட்சம் போ் அருங்காட்சியகத்தை பாா்வையிட்டுள்ளனா்.
இந்த நிலையில், அருங்காட்சியகத்தை பொதுமக்கள் அதிகம் அறிந்து கொள்ளும் வகையில், வருகிற ஜூன் 26-ஆம் தேதி மாலை 5 முதல் இரவு 10 மணி வரை உணவுத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரிய உணவுகள் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளுக்கான அரங்குகள் அமைக்கப்படவுள்ள நிலையில், இந்த திருவிழாவுக்கு நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை என்றும், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் இந்த உணவுத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனவும் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமரி திருவிழா ஜூன் 26இல் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

மதுரையில் இன்று கொங்கு நாட்டு உணவுத் திருவிழா தொடக்கம்

சுற்றுலா துறையின் தமிழ்நாடு உணவகங்களில் கொங்கு நாடு உணவுத் திருவிழா: மே 15-இல் தொடக்கம்

இயற்கை விவசாயிகளின் ஊா்தோறும் உணவுத் திருவிழா
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




