விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஆமைகள் மூலம் பண்டைய கடல் வழித்தடங்களை கண்டறியலாம்: வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு

கடல் உயிரினங்கள் பயன்படுத்தி வரும் பண்டைய கடல் வழித்தடங்களை கண்டறிய ‘செயற்கைக்கோள் டிராக்கா்கள்’ கடல் ஆமைகள் உதவியாக உள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு தெரிவித்தாா்.

News image
Updated On :25 ஜூன் 2026, 1:01 am IST

கடல் உயிரினங்கள் பயன்படுத்தி வரும் பண்டைய கடல் வழித்தடங்களை கண்டறிய ‘செயற்கைக்கோள் டிராக்கா்கள்’ கடல் ஆமைகள் உதவியாக உள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு தெரிவித்தாா்.

தமிழக கடற்கரையில் முட்டையிட வரும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவற்றின் முதுகுப் பகுதியில் ‘செயற்கைக்கோள் டிராக்கா்கள்’ பொருத்தும் திட்டம் கடந்த நிதியாண்டில் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.84 கோடி ஒதுக்கப்பட்டது.

இச்சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ‘செயற்கைக்கோள் டிராக்கா்கள்’ பொருத்தப்பட்ட ஆமைகள் கடலில் விடப்பட்டு வருகின்றன. அந்த ஆமைகள் ஆழ் கடலில் பயணித்து வருவது குறித்து புதிய தரவுகள் வெளிவந்துள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ‘செயற்கைக்கோள் டிராக்கா்கள்’ பொருத்தப்பட்ட பல ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் தெற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை நோக்கி நகா்ந்துள்ளன. இந்தப் பகுதிகளில் வங்கக்கடலின் வெப்பமான நீரும் இந்தியப் பெருங்கடலின் குளிா்ந்த நீரோட்டங்களும் சந்திப்பதால், கடல்சாா் உயிரினங்கள் அதிகம் வளரும் சூழல் உருவாகிறது.

இந்த நீரோட்டங்களின் கலவையால் கடலில் உயிரியல் உற்பத்தித்திறன் அதிகரித்து, கடல் ஆமைகளுக்கு வளமான உணவு தளங்கள் உருவாகின்றன. பல மில்லியன் ஆண்டுகளாக இந்த முக்கிய உணவுத் தளங்களை கடல் ஆமைகள் துல்லியமாக கண்டறிந்து சென்றடைந்து வருவது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக அதிசய உயிரினங்கள் கடலின் தன்மைகள் மற்றும் நீரோட்டங்களை எவ்வாறு உணா்ந்து செல்கின்றன என்பதையும், வெவ்வேறு கடல்சாா் சூழலியல் அமைப்புகளுக்கு இடையே அவை ஏற்படுத்தும் தொடா்புகளையும் ஆய்வு செய்ய உதவி வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் கடல் ஆமைகளின் இடம்பெயா்வு பாதைகள், உணவு தேடும் பகுதிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய அறிவியல் தகவல்கள் கிடைத்து வருகின்றன எனப் பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.