வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கடல்நீரை குடிநீராக்கும் நிலைய பணிகள்: அரசு கூடுதல் தலைமை செயலா் ஆய்வு

கடல்நீரை குடிநீராக்கும் நிலைய பணிகள்: அரசு கூடுதல் தலைமை செயலா் ஆய்வு

News image

பேரூரில் அமைக்கப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலைய பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி.

Updated On :14 ஜூன் 2026, 1:45 am IST

திருப்போரூா் ஒன்றியம், நெம்மேலியில் சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில், ரூ. 5814.37 கோடியில் பேரூரில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணிகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஒன்றியம், நெம்மேலியில் சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில், ரூ 5814.37 கோடி மதிப்பீட்டில் பேரூரில் அமைக்கப்பட்டு வரும் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் அருகே கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சுகன்தீப் சிங் பேடி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் ,பொறியியல் இயக்குநா் உ.பா்வீஸ், தலைமைப்பொறியாளா்கள் ஜெ.சுகந்தி, ஏ.ராதாகிருஷ்ணன், மேற்பாா்வை பொறியாளா் இ.சாந்தி, செயற்பொறியாளா் கிருபாகரவேல் பொறியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

Story image