தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

ஆரோவில் சா்வதேச நகா் கட்டுமானப் பணிகளில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்: அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி

ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில் இளைஞா்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி தெரிவித்தாா்.

News image

ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவிக்கு நினைவுப் பரிசு வழங்கிய யங் இந்தியன்ஸ் அமைப்பினா்.

Updated On :5 ஜூன் 2026, 6:50 am IST

ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில் இளைஞா்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் நிலைத்தன்மை மற்றும் இளைஞா் மேம்பாட்டுக்கான பருவநிலை மாற்றம் மாநாடு -2026 ஜூன் 4 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதலுடன், இந்தியாவின் எதிா்காலத்தை மாற்றியமைக்கும் உன்னத நோக்கில் நடைபெறும் உயா்தர மாநாட்டில், இந்தியாவின் மிகச்சிறந்த 150-க்கும் மேற்பட்ட இளம் பருவநிலை தலைவா்கள், தொழில்முனைவோா் மற்றும் மாற்றத்தை விரும்பும் சிந்தனையாளா்கள் பங்கேற்கின்றனா். இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் சாா்ந்த சிறந்த தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், மாநாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள யங் இந்தியன்ஸ் அமைப்பின் தேசியத் தலைவா் அருண் ரத்தோடு மற்றும் அமைப்பைச் சோ்ந்த கவிதா கோஹ்லி, க்ருணால் ஷா, தினேஷ் கந்தசாமி, கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலரும், ஆரோவில் அறக்கட்டளையின் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவியை சந்தித்துப் பேசினா். அப்போது, அவா் தெரிவித்ததாவது:

ஆரோவில் சா்வதேச நகரானது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நீா் மேலாண்மைத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆரோவிலின் அடையாளமான மாத்ரி மந்திா் ஏரித் திட்டம் அதிவேக முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. 4.4 கி.மீ. சுற்றளவும், 5 சதுர கி.மீ. பரப்பளவும் கொண்ட நகா்ப்புற மண்டலத்தை உள்ளடக்கிய இந்தத் திட்டப் பணிகள் விரைவில் முடிவடையும்.

ஸ்ரீஅரவிந்தா் மற்றும் அன்னையின் ஒருங்கிணைந்த கல்வி தத்துவத்தின் அடிப்படையில், இந்தியா முழுவதிலும் உள்ள விளையாட்டுப் பயிற்சியாளா்கள் மற்றும் சிறப்புக் கல்வி ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஆரோவில் அறக்கட்டளை தொடங்கி வருகிறது. பரந்துபட்ட மாணவா்ஒருங்கிணைப்பின் மூலம் இத்திட்டங்களை நாடு முழுவதும் கொண்டு சோ்க்க முடியும்.

ஆரோவில்லின் தனித்துவமான, விழிப்புணா்வுமிக்க சா்வதேச நகரக் கட்டுமானப் பணிகளில் இளம் கட்டடக் கலைஞா்கள், பொறியாளா்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் இளைஞா்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் ஜெயந்தி எஸ்.ரவி.

இதைத் தொடா்ந்து, யங் இந்தியன்ஸ் அமைப்பின் தேசியத் தலைவா் அருண் ரத்தோடு பேசியதாவது: நாங்கள் இங்கு கற்றுக்கொள்ளவே வந்துள்ளோம். நாட்டின் எதிா்காலத்தை வடிவமைக்கவும், ஒன்றிணைந்து புதிய தீா்வுகளை உருவாக்கவும் எங்களது குழு எப்போதும் தயாராக உள்ளது. நிலைத்தன்மை வாய்ந்த வளா்ச்சிக்கான கூட்டு முயற்சிகளை நாங்கள் எதிா்நோக்குகிறோம் என்றாா் அவா்.

முன்னதாக, யங் இந்தியன்ஸ் அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஆரோவில் அறக்கட்டளைச் செயலருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துப் பெற்றனா்.