தமிழகத்தில் 17 ஐஏஎஸ் உயர் அதிகாரிகள் இன்று(மே 18) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக தவெக அரசு அமைந்ததில் இருந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடா்ச்சியாக 17 உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலாளராக அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
* நீர்வளத் துறை செயலாளராக சத்யபிரத சாஹு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரகுருபரன் மாற்றப்பட்டு, சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
* பொதுப்பணித் துறை செயலராக சுசோங்கம் ஜடாக் சிரு நியமிக்கப்பட்டுள்ளார்.
* பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி.யாக இருந்த தினேஷ் பொன்ராஜ், குடிநீர் வழங்கல் வடிகால் மேலாண்மைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராக ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
* சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக ராகுல்நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* போக்குவரத்துத் துறை செயலராக வள்ளலார் நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை மெட்ரோ குடிநீர் மேலாண் இயக்குநராக ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலராக அனில் மேஷ்ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
* வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை செயலராக கே.எஸ். பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை செயலராக தக்ஷிணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளராக சஞ்ஞன் சிங் சவான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Summary
17 senior IAS officers in Tamil Nadu have been transferred today (May 18).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம்!

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


