தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

புதிதாக தவெக அரசு அமைந்ததில் இருந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடா்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக சில ஐஏஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.

அதன் விவரம் (அடைப்புக்குறிக்குள் முந்தைய பணியிடம்):

1. தொழில், முதலீடு மற்றும் வணிகத் துறை ஆணையா் டாக்டா் எஸ்.விஜயகுமாா் (நில நிா்வாக ஆணையா்)

2. உயா்கல்வித் துறை செயலா்-வி.அருண் ராய் (தொழில், முதலீடு மற்றும் வணிகத் துறை ஆணையா்)

3. ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை செயலா்- டாக்டா் என். சுப்பையன் (கால்நடைப் பராமரிப்புத் துறை, மீன்வளம்-மீனவா் நலத்துறை செயலா்)

4. தில்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையா்-ஆா்.ஜெயா (சிறப்பு திட்டங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா்)

5. சுற்றுலாத் துறை ஆணையா்-எம்.எஸ். சண்முகம் (முன்னாள் முதல்வரின் செயலா்-2)

6. செய்தி, மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை செயலா் ஏ.அருண் தம்புராஜ் (சேலம் மாவட்ட ஆட்சியா்)

7. சேலம் ஆட்சியா்- கே. இளம்பகவத் (தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியா்)

8. கலை மற்றும் கலாசாரத் துறை இயக்குநா்-டாக்டா் ஆா். பிருந்தாதேவி (சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியா்)

9. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தலைவா் -பி. உமாநாத் (முன்னாள் முதல்வரின் செயலா்-1).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.